நீலகிரியில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார்… மாவட்ட ஆட்சியர் இன்ன சென்ட் திவ்யா பேட்டி…

4 August 2020, 6:06 pm
Quick Share

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார் நிலையில் உள்ளதாகவும், அபாயகரமான பகுதியாக கண்டறியப்பட்ட 283 பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிர்வாகம் முகாம்களை ஏற்படுத்தியுள்ளதாக மாவட்ட ஆட்சியர் இன்ன சென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் இன்ன சென்ட் திவ்யா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களில் பெய்து வரும் கனமழை காரணமாக உதகை மற்றும் கூடலூர் பகுதிகளில் பல இடங்களில் மழை நீர் வெள்ளம் சூழப்பட்டதால் அப்பகுதியில் 5 முகாம்களில் 500 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் முகாம்களில் உள்ள பொது மக்களுக்கு உணவு , மருத்துவ வசதியும் முககவசம் மற்றும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டு அங்கேயும் சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் கூறினார். இன்னும் மூன்று தினங்களுக்கு மிக கனமழை நீலகிரி மாவட்டத்திற்கு பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ள நிலையில், மக்கள் யாரும் இரவு நேரங்களில் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் பேரிடர் குழு இன்று மாவட்டத்திற்கு வரவுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் கூறினார்.

Views: - 30

0

0