உத்தரகாண்ட் வெள்ளப்பெருக்கு சூழல்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்: பிரதமர் மோடி…!!

7 February 2021, 4:52 pm
PM_Modi_UpdateNews360
Quick Share

புதுடெல்லி: உத்தரகாண்ட் வெள்ளப்பெருக்கு சூழல்களை தொடர்ந்து கண்காணித்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

உத்தரகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் திடீரென ஏற்பட்ட பனிச்சரிவினால் தவுளிகங்கா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளத்தில் சிக்கி 100 முதல் 150 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. வெள்ளத்தில் அணை உடைந்ததால் ரிஷிகங்கா நீர்மின் நிலையம் சேதமடைந்துள்ளது.

தேசிய பேரிடர் மீட்புப் படை அப்பகுதிக்கு விரைந்துள்ளது. வெள்ள பாதிப்பு, மீட்புப்பணி நடவடிக்கைகள் குறித்து உத்தரகாண்ட் முதலமைச்சருடன், மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா பேசினார். இந்நிலையில், பிரதமர் மோடி டுவிட்டர் பதிவில்,

உத்தரகாண்ட் பனிப்பாறை வெள்ளம் தொடர்பாக தாமும், தமது அலுவலகமும் தொடர்ந்து அங்குள்ள நிலவரத்தை கண்காணித்து வருவதாகவும், இந்த பேரிடருக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்றும், இந்த தேசமே உத்தராகாண்ட் மாநிலத்திற்கு துணை நிற்கும் என்றும், மேலும், அங்குள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்க நாடேபிரார்த்தனை செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 0

0

0