சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் இடம்பெற்ற கல்லூரி முதல்வர்

24 November 2020, 6:58 pm
Quick Share

வேலூர்: வேலூரில்  பெண் கல்விக்காக துவங்கப்பட்ட கல்லூரியில் கல்லூரியின் முதல்வர் சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

வேலூரில் உள்ள தனபாக்கியம் கிருஷ்ணசாமி மகளிர் கல்லூரியில் கடந்த 33 ஆண்டுகளாக பேராசிரியராக பணியாற்றி தற்போது கல்லூரியின் முதல்வராக உள்ளவர் முனைவர் சுதா. இவர் வேதியியல் துறையில் ஆய்வுக்கட்டுரையை சமர்பித்து சாதனை படைத்துள்ளார். அதுவும் சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் சாதனை படைத்துள்ளார். பாலிமர் மெட்டிரியல்ஸ் என்ற ஆய்வில் வேலூர் மாவட்டத்தில் மண்ணில் கலந்துள்ள தொழிற்சாலை ரசாயன கழிவுகளை பொன்னாங்கன்னி கீரை,

சூரியகாந்தி உள்ளிட்ட தாவரங்களை பயிரிட்டு அந்த கழிவுகளை அகற்றி அந்த மண் ரசாயனமில்லாமல் மீண்டும் விவசாயத்திற்கு கொண்டு வரும் ஆய்வும், கழிவுநீர்களை சுத்திகரித்து கழிவுகளை பிரிததெடுத்து நீரை மறுசூழற்சிக்கு கொண்டு வருவது குறித்தும் இரண்டு ஆய்வுகளில் அவர்கள் ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பித்து அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பெண்கள் முன்னேற்றத்திற்காகவே தொடங்கப்பட்ட அரசு உதவி பெறும் இக்கல்லூரியில் பெண் ஒருவர் சிறந்த விஞ்ஞானி பட்டியலில் இடம் பிடித்துள்ளது கல்லூரிக்கும் மாணவிக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டத்தை சேர்ந்த இவர்  சிறந்த விஞ்ஞானிகளுக்கான அமெரிக்கா ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் தரவரிசை பட்டியலில் இடம்பெற்றுள்ளது வேலூர் மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எப்போதும் கல்வியில் பின் தங்கியமாவட்டமாகவே இருந்த இந்த வேலூர் மாவட்டத்தில் தற்போது ஆராய்ச்சிகளில் அதிக அளவு மாணவர்கள் ஈடுபட்டு சிறந்த விஞ்ஞானிகளாக உருவாகியுள்ளது. இம்மாவட்டத்திற்கு மட்டுமல்ல தமிழகத்திற்கே பெருமை சேர்ப்பதாகவும் உள்ளது. மேலும் எதிர்காலத்தில் இந்த ஆராய்ச்சிக்ள் நாட்டு மக்கள் விவசாயிகள் தொழிற்சாலைகளுக்கு இந்த கண்டுபிடிப்புகள் பயனுள்ளதாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 0

0

0