மேம்பாலத்தில் ஆம்புலன்ஸ் கவிழ்ந்து விபத்து: நோயாளி உட்பட மூன்று பேர் காயம்

13 September 2020, 6:56 pm
Quick Share

சென்னை: வியாசர்பாடி மேம்பாலத்தில் ஆம்புலன்ஸ் கவிழ்ந்து விபத்தில் ஆம்புலன்ஸில் இருந்த நோயாளி, டிரைவர் உட்பட மூன்று பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி அளிக்கப்பட்டுனர்.

சென்னை வியாசர்பாடி மேம்பாலத்தில் தனியார் ஆம்புலன்ஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து கொரோனா நோயாளிகளை ஏற்றி கொண்டு வந்ததாக கூறப்படுகின்றது. பின்னர் நோயாளியை ஏற்றி கொண்டு சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலமாக அழைத்து வரப்பட்டிருக்கிறது. இந்நிலையில் சென்னை வியாசர்பாடி மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த வாகனம் அங்குள்ள சுவற்றில் மோதி விபத்துக்குள்ளானது.

ஆம்புலன்ஸில் உள்ளே இருந்த நோயாளி , டிரைவர் , சுரேஷ் சிறு காயங்கள் ஏற்பட்டதால் மூவரையும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 6

0

0