டூவீலர் மீது தனியார் பேருந்து மோதி விபத்து : டூவிலர் தீப்பிடித்து எரிந்து முன்னாள் கவுன்சிலர் உட்பட இருவர் பலி

2 February 2021, 9:34 pm
Quick Share

மதுரை: திருமங்கலம் அருகே டூவீலர் மீது தனியார் பேருந்து மோதி சாலையில் டூவிலர் உரசியபடியே சென்றதில் டூவிலர் தீப்பிடித்து எரிந்ததில் முன்னாள் கவுன்சிலர் உட்பட இருவர் உயிரிழந்தனர்.

மதுரை திருமங்கலம் அருகே உள்ள ஊத்துப்பட்டியைச் சேர்ந்தவர் கோபு(49) முன்னாள் கவுன்சிலர் அதே பகுதியைச் சேர்ந்த புண்ணிய மூர்த்தி(50) ஆகிய இருவரும் மதுரையில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தில் ஒப்பந்ததாரர்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்கள் இன்று இரவு வேலையை முடித்து விட்டு மதுரையில் இருந்து வீட்டிற்கு செல்வதற்காக நாகமலை புதுக்கோட்டை வழியாக ஒரே டூவிலரில் சென்று கொண்டிருந்த போது காமராஜர் பல்கலைக்கழகம் அருகில் பின்னால் வந்த மதுரை டூ தேனி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து டூவிலர் மீது பயங்கரமாக மோதியது.

அப்போது பேருந்தின் முன் சிக்கிய டூவீலரை பேருந்து சில தூரம் சாலையில் இழுத்துச் சென்றதில் டூவீலர் திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இந்த விபத்தில் டூவீலரில் சென்ற இருவரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். விபத்தை ஏற்படுத்திய பேருந்து நிற்காமல் சென்றது. இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் போலீசுக்கு தகவல் கொடுக்கவே விரைந்து வந்த நாகமலைபுதுக்கோட்டை காவல்துறையினர் இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுபோன்ற விபத்துகள் இந்தப் பகுதியில் அடிக்கடி ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
சினிமா பாணியில் தனியார் பேருந்தை சுமார் 20 கிலோ மீட்டர் விரட்டி சென்று அதன் ஒட்டுனரை கைது செய்த போலீசார் விபத்தை ஏற்படுத்தி சென்ற தனியார் பேருந்தை மடக்கி பிடித்து காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 0

0

0