பெண்ணை ஏமாற்றி உல்லாசமாக இருந்த தனியார் நிறுவன ஊழியர் கைது

26 October 2020, 6:53 pm
Quick Share

காஞ்சிபுரம்: ஒரகடத்தில் பெண்ணை ஏமாற்றி உல்லாசமாக இருந்த தனியார் நிறுவன ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் (30). இவர் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வல்லக்கோட்டையில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி ஓரகடம் சிப்காட்டில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். இவருக்கும் ஒரகடம் அடுத்த பேரீஞ்சம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த மோகன் என்பவரின் மகள் கல்யாணியுடன் (30) பழக்கம் ஏற்பட்டு காதல் மலர்ந்துள்ளது.

பின்னர் கல்யாணியை திருமணம் செய்து கொள்வதாக கூறி அப்பெண்ணுடன் சீனிவாசன் தனிமையில் இருந்துவிட்டு பின்பு திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். இது சம்பந்தமாக கல்யாணியின் தந்தை மோகன் கொடுத்த புகாரின் பெயரில் சீனிவாசனை கைது செய்த காவல் ஆய்வாளர் அஞ்சால லட்சுமி சீனிவாசனிடம் விசாரணை நடத்தியதை அடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Views: - 11

0

0