தனியார் கம்பெனியின் காவலாளி கொலை: இருசக்கர வாகனம் மற்றும் செல்போன் திருட்டு

18 July 2021, 3:55 pm
Quick Share

தஞ்சை: தஞ்சையில் தனியார் கம்பெனியின் காவலாளி கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தஞ்சாவூர் குருதயாள்சர்மா, விஜயலட்சுமி நகரை சேர்ந்தவர் ஜெயபால் (74). இவர் தஞ்சாவூர் தளவாய்பாளையம் ரயில்வே கேட் அருகில் உள்ள ஒரு தனியார் பைப் கம்பெனியில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை ஜெயபால் பைப் கம்பெனியயின் வாசலில், தலையில் கடுமையாக தாக்கப்பட்டு இரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். இதை அந்த வழியாக சென்றவர்கள், காவலாளி கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து, உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் அம்மாபேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தடய அறிவியல் துறையினரும் வந்து கைரேகைகளை, தடயங்களையும் சேகரித்து வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், ஜெயபாலின் இருசக்கர வாகனமும், செல்போனும் திருட்டு போயிருப்பது தெரியவந்துள்ளது. மேலும் காவலாளி கொலை செய்யப்பட்ட இடத்தின் அருகில் கருங்கல் ஒன்று இரத்தக் கரையுடன் இருந்ததால் காவலாளி கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் அந்த பகுதிகளில் சமூக விரோதிகள் மது அருந்தி அராஜகத்தில் ஈடுபடுபது வழக்கமாக உள்ளது. இதனால் குடி போதையில் யாரேனும் கொலை செய்தார்களா, திருட்டிற்காக இந்த கொலை நடந்ததா, முன்விரோதம் காரணமாக நடந்தா என காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்த ஜெயபாலின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக பாபநாசம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Views: - 125

0

0