40 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்து தனியார் தொழிற்சாலை ஊழியர் உயிரிழப்பு

19 November 2020, 9:21 pm
Quick Share

காஞ்சிபுரம்: உத்திரமேரூர் அருகே தனியார் தொழிற்சாலையில் 40 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்து தனியார் தொழிற்சாலை ஊழியர் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உத்திரமேரூர் அடுத்த களியாம்பூண்டியில் உள்ள தனியார் இரும்பு உருக்கு ஆலையில் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த பரத்வாஜ் என்கின்ற இளைஞர் ஒப்பந்த ஊழியராக நேற்று பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளார். இன்று காலை தொழிற்சாலையின் கூரையில் சுமார் 40 அடி உயரத்தில் பணி செய்து கொண்டிருக்கும் போது நிலைதடுமாறி கீழே விழுந்ததில் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பெருநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இதேபோல் மறைமலை நகரில் தனியார் தொழிற்சாலை உள்ளது.

அங்கும் குன்றத்தூரை சேர்ந்த பாஸ்கரன் என்பவர் வெல்டிங் வேலை செய்து வந்தார். தொழிற்சாலை மாடியில் வெல்டிங் வேலை செய்தபோது எதிர்பாராதவிமாக கீழே விழுந்தார்.இதில் படுகாயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாஸ்கரன் இறந்தார் மறைமலைநகர் போலீசார் விசாரித்து வருகின்றனர். 

தொழிற்சாலைகளில் இயந்திரங்கள் மத்தியில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு பணிபுரியும் இடத்தில் பாதுகாப்பு மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகும். ஆனால் இயந்திரங்களை கையாளுவதற்கேற்ப போதுமான கல்வித் தகுதியோ அனுபவமோ, பாதுகாப்பு உபகரணங்களும் அளிக்காமல் இத்தொழிலாளர்களை வலுக்கட்டாயமாக அத்தகைய வேலைகளில் தொழிற்சாலை நிர்வாகம் ஈடுபடுத்தியிருக்கிறது என தொழிலாளர்கள் கூறுகின்றனர்.

Views: - 0

0

0