கொரோனோ சிகிச்சை மற்றும் பரிசோதனைக்கு அதிக வசூல்: தனியார் மருத்துவமனையின் உரிமம் ரத்து…

7 August 2020, 10:47 pm
Quick Share

விருதுநகர்: அருப்புக்கோட்டையில் கொரோனோ சிகிச்சை மற்றும் பரிசோதனைக்கு அதிக வசூல் செய்த தனியார் மருத்துவமனைக்கு கொரோனா பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கும் உரிமத்தை ரத்து செய்து அரசு தலைமை மருத்துவமனை இணை இயக்குனர் மனோகரன் உத்தரவிட்டுள்ளார்.

விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா நோய்த் தொற்றானது நாளுக்கு நாள் அதிகம் பரவிக் கொண்டிருந்த நிலையில் மாவட்டத்தின் பல பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவமனைகளை கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்க தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில் அருப்புக்கோட்டையில் சிட்டி மருத்துவமனை (தனியார் மருத்துவமனை ) கொரோனா நோய் தொற்று பரிசோதனை மற்றும் சிகிச்சை மையமாக செயல்பட்டு வருகிறது இந்த தனியார் மையத்தில் பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கு அதிக கட்டணம் அளிக்கப்பட்டதாக வந்த புகாரின் அடிப்படையில் நேற்று அருப்புக்கோட்டை வருவாய் வட்டாட்சியர் தலைமையில் மருத்துவமனை அதிகாரிகள் விசாரணை நடைபெற்றது.

சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற விசாரணையின் அறிக்கையை வட்டாட்சியர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனன இணை இயக்குனர் மனோகரனிடம் சமர்ப்பித்தார் அறிக்கையின் முடிவை அடுத்து அந்த தனியார் மருத்துவமனைக்கு கொரனோ பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்க வழங்கப்பட்ட உரிமையை மட்டும் ரத்து செய்து மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை இணை இயக்குனர் மனோகரன் உத்தரவிட்டுள்ளார். தற்பொழுது அங்கு கொரோனா சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் விரும்பினால் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படும் எனவும், இனி மக்கள் யாரும் கொரோனா பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கு அந்த தனியார் மருத்துவமனை செல்ல தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

Views: - 7

0

0