வாடிக்கையாளர்களுக்கு 27 வகையான உணவுகளை வழங்கி அசத்தியது தனியார் உணவகம்…

14 January 2021, 6:25 pm
Quick Share

நீலகிரி: உதகையில் தைப் பொங்கலை யொட்டி வாடிக்கையாளர்களுக்கு 27 வகையான உணவுகளை தனியார் உணவகம் வழங்கி அசத்தியது.

தைப் பொங்கலில் பாரம்பரிய உணவுகளை சமைத்து உண்பது தமிழர்களின் பண்பாடாக இருந்து வருகிறது.
இதை கருத்தில் கொண்டு பல உணவகங்கள் தைப் பொங்கல் நாளில் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பாரம்பரிய உணவுகளை வழங்கும்.உதகையில் உள்ள ஒரு தனியார் உணவகம் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பாரம்பரிய உணவுகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளது இந்த முறையும் 27 வகையான பொங்கல் பாரம்பரிய உணவுகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி அசத்தியுள்ளது.
சுற்றுலாவிற்காக ஊட்டிக்கு அதிகமான சுற்றுலா பயணிகள் வந்துள்ள நிலையில் இந்த உணவகத்தில் வழங்கப்படும் பொங்கல் பாரம்பரிய உணவுகளை உண்பது மகிழ்ச்சியாக உள்ளது என தெரிவித்தனர்.

Views: - 10

0

0