2 மாத ஊதியத்தை வழங்க கோரி தனியார் பள்ளி அசிரியைகள் தர்ணா போராட்டம்

9 September 2020, 5:07 pm
Quick Share

கரூர்: குளித்தலை அருகே, நச்சலூர் தனியார் மெட்ரிக் பள்ளியில் இரண்டு மாத ஊதியம் வழங்கவில்லை என ஐந்து ஆசிரியைகள் பள்ளி முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த நச்சலூரில் அமைந்திருக்கும் கிங்ஸ் மெட்ரிக் பள்ளியில் தற்காலிக பணியில் 6 ஆசிரியைகள் வேலை பார்த்து வருவதாகவும், இந்நிலையில் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதம் ஆகிய இரண்டு மாத ஊதியம் பலமுறை பள்ளி உரிமையாளரிடம் கேட்டும் அலைகழித்து வருவதாகவும்,

இதை மேலும் முறையிட்டால் புதியதாக ஊழியர்களை நியமிக்கப்படுவதாக குற்றம் சாட்டினர். உடனடியாக 2 மாத ஊதியத்தை வழங்க வேண்டுமென பள்ளி முகப்பு முன்பு 5 ஆசிரியைகள் அமர்ந்து போராட்டம் செய்தனர். இது குறித்து பள்ளி உரிமையாளரிடம் கேட்டதில் கொரோனா காலகட்டங்களில் நிதி பற்றாக்குறையால் ஊதியம் வழங்கப்படவில்லை எனவும், அவர்கள் பணியை தொடர்ந்து மேற்கொண்டால் மட்டுமே ஊதியத்தை வழங்க முடியும் என தெரிவித்தார்.

Views: - 0

0

0