தனியார் ஜவுளி உற்பத்தி நிறுவனத்தின் பாய்லர் வெடித்து விபத்து: 2 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதி

Author: Udhayakumar Raman
6 August 2021, 4:57 pm
Quick Share

மதுரை: விளாங்குடியில் உள்ள தனியார் ஜவுளி உற்பத்தி நிறுவனத்தின் பாய்லர் வெடித்த விபத்தில் 2 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மதுரை விளாங்குடியில் மணிராஜ் என்பவருக்கு சொந்தமான ஜவுளி உற்பத்தி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. ஆண்களுக்கான ஆடை ரகங்கள் உற்பத்தி செய்யும் பணியில் சுமார் 100க்கும் மேற்பட்ட பெண்கள் ஈடுபட்டு வந்த நிலையில் திடீரென கொதிகலன் வெடித்து சிதறியது. இதில் பணியில் இருந்த 4 பெண்கள் படுகாயமடைந்தனர். காயமடைந்த 4 பேரையும் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் படுகாயத்துடன் சிகிச்சையில் உள்ளனர். சம்பவம் அறிந்து வந்த காவல்துறையினர் விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 114

0

0