மின்வாரிய தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து தொழிற்சங்கத்தினர் தர்ணா!

4 November 2020, 3:24 pm
Quick Share

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட தமிழ்நாடு மின்வாரிய தொழிற் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு தமிழ்நாடு மின் வாரிய தலைவரின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்

தமிழ்நாடு மின் வாரிய தலைவரின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து மாநிலம் தழுவிய அளவில் தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகரத்திற்கு உட்பட்ட பாலம்மாள் காலனியில் உள்ள மின்வாரிய எஸ் இ அலுவலகத்தின் முன்பு சிஐடியு வட்டத் தலைவர் அருள் மற்றும் பொறியாளர் சங்கம் வட்ட செயலாளர் தணிகைச்செல்வன் ஆகியோரின் தலைமையில் தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களை சேர்ந்த திருப்பத்தூர் மாவட்ட மின் ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் தர்ணா போராட்டத்தில் ஊழியர் மற்றும் பொறியாளர் அலுவலர்களின் பதவிகளை ஒழிக்கக் கூடாது, துணை மின் நிலையங்களை பராமரிக்க தனியாரிடம் ஒப்படைக்க கூடாது, உள்ளிட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், அரசாணை 304 ஐ மின்வாரியத்தில் அமலாக்க வேண்டும் போன்ற எட்டு வகையான கோரிக்கைகளை முன்வைத்தனர். இந்த போராட்டத்தில் சிஐடியு, பொறியாளர் சங்கம், சம்மேளனம், ஏஇஎஸ்யூ, ஐக்கிய சங்கம், தொழிலாளர் முன்னேற்ற சங்கம், டிஈயூ போன்ற சங்கங்களை சேர்ந்த மின் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Views: - 15

0

0