தீயணைப்பு மீட்பு பணிகள் துறை சார்பில் செயல்முறை விழிப்புணர்வு ஒத்திகை

Author: kavin kumar
2 November 2021, 1:28 pm
Quick Share

தருமபுரி: தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், பேரிடர் மேலாண்மைதுறை மற்றும் தீயணைப்பு மீட்பு பணிகள் துறை சார்பில் செயல்முறை விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழகத்தில் தற்போது பருவமழை தொடங்கியதை அடுத்து நீர்நிலைகளில் அதிகளவில் தண்ணீர் தேங்கி இருப்பதால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் எதிர்பாராத விதமாக பலர் நீரில் மூழ்கி உயிரிழப்பு ஏற்படாமல் தடுக்கும் வகையிலும் அவர்களை எவ்வாறு காப்பாற்றுவது, அதே போல் தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதையடுது பாதுகாப்பாக பட்டாசுகளை வெடிப்பது குறித்தும், தீவிபத்தில் பாதிக்கபட்டவர்களை காப்பாற்றுவது குறித்தும், தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு துறை சார்பில் செயல்முறை விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்சி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி முன்னிலையில் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. அரசு அலுவலர்கள், பொது மக்கள் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த செயல்முறை விளக்க நிகழ்சியில் பேரிடர் காலங்களில் பாதிக்கப்பட்டவர்களை எவ்வாறு மீட்பது குறித்த செயல்விளக்கத்தை தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு துறையினர் செய்து காட்டினர்.

Views: - 174

0

0