பட்டுப்புடவைகளை ஆன்லைன் மூலம் விற்பனை செய்யும் திட்டம்: தொடங்கி வைத்த அமைச்சர் சிவசங்கர்
Author: kavin kumar21 August 2021, 6:53 pm
அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் பட்டுப்புடவைகளை ஆன்லைன் மூலம் விற்பனை செய்யும் திட்டத்தை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.
அரியலூர் மாவட்டத்தில் ஜெயங்கொண்டம், தேவாமங்கலம், சின்னவளையம், கங்கை கொண்டசோழபுரம், மேலணிக்குழி, செங்குந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 7000த்திற்கும் மேற்பட்டோர் சொந்த தறியில் பட்டுபுடவைகளை உற்பத்தி செய்து வருகின்றனர். இந்நிலையில் இதனை ஊக்குவிக்கும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் www.ariyalur.nic.in என்ற இணையதளத்தில் அமைக்கபட்ட விற்பனை தனிப்பிரிவினை பிற்படுத்தபட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார். இதன்மூலம் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பிடித்த பட்டுபுடவைகளை ஆன்லைன் மூலம் தேர்வு செய்து அதிலுள்ள வாட்ஸ்ஆப் எண்ணில் தொடர்பு கொண்டால் தங்களுக்கு உண்டான பொருட்களை பெற்று கொள்ளலாம் என தெரிவிக்கபட்டுள்ளது. இதில் அரசு அதிகாரிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
0
0