குமரியில் பிரபல கஞ்சா வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது…

23 November 2020, 4:34 pm
Quick Share

கன்னியாகுமரி: குமரியில் பிரபல கஞ்சா வியாபாரி குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்துள்ளனர்.

குமரி மாவட்டத்தில் குற்றச் செயல்களை தடுத்து சட்டம் ஒழுங்கைப் பேணி காக்கும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் பத்ரிநாராயணன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன்படி கடைகளில் போதைப்பொருள் விற்பனை தடுப்பு, கஞ்சா வியாபாரிகள் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் தொடர் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.

 அந்த வகையில் குமரி மாவட்டத்தில் பல்வேறு கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய பாலப் பள்ளம் பகுதியை சேர்ந்த மார்டின் என்ற செல்வின் கிளைமெண்டை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய குமரி மாவட்ட கலெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நாராயணன் பரிந்துரை செய்தார். அதன் அடிப்படையில் ,பல முறை போலீஸ் எச்சரித்தும் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த மார்ட்டினை குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்கான உத்தரவைப் மாவட்ட அட்சியாளர் பிறப்பித்துள்ளார். இதனைத் தொடர்ந்து கருங்கல் எஸ்.ஐ.தங்கராஜ் இன்று மார்ட்டினை குண்டர் சட்டத்தில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைந்தார்.

Views: - 0

0

0