ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது வழக்குப்பதிவு

13 September 2020, 4:46 pm
Quick Share

திருவாரூர்: ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் உட்பட 25 விவசாயிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டம் காரியமங்கலம் என்ற பகுதியில் செயல்பட்டுவரும் ஓஎன்ஜிசி எண்ணெய்க் கிணறுகள் முன்பாக நேற்று தமிழக காவிரி விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் விவசாயிகள் முற்றுகை போராட்டம் நடத்தினர். தமிழகத்தில் புதிதாக எட்டு எண்ணெய் கிணறு அமைப்பதற்கு ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கால நீட்டிப்பு வழங்கி அனுமதி வழங்கியதாக குற்றஞ்சாட்டி போராட்டம் நடைபெற்றது.


போராட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் உட்பட 25 விவசாயிகள் மீது கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறியது, சட்டவிரோதமாக ஒன்று கூடியது, அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டது உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் விக்கிரபாண்டியம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Views: - 0

0

0