குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு: அசோகபுரம் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்

Author: Udayaraman
5 August 2021, 8:58 pm
Quick Share

கோவை: குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை அசோகபுரம் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்டம் அசோகபுரம் ஊராட்சியில் உள்ள 12 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் பல ஆண்டுகளாக அதே ஊராட்சிக்கு உட்பட்ட லட்சுமி நகர் பகுதியில் மலை போல் குவிக்கப்பட்டு வந்துள்ளது.இதனால் அப்பகுதியில் உள்ளவர்களுக்கு சுகாதரக்கேடு ஏற்படுவதாக குற்றம் சாட்டியிருந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் மர்ம நபர்கள் அந்த குப்பைகளுக்கு தீவைத்துள்ளனர். அந்த தீ குப்பைமேடு முழுவதும் பரவி கொழுந்துவிட்டு எரியத்தொடங்கியுள்ளது.
இதனால் அப்பகுதி முழுவதும் புகை மூட்டம் ஏற்பட்டு அப்பகுதி மக்கள் சுவாசிக்கவே சிரமப்பட்டுள்ளனர். உடனடியா தீயணைப்புத் துறையினர் வந்து 6 மணி நேரம் போராடி தீயை அனைத்துள்ளனர்.

ஆனால் அதன்பின்பும் தீ முழுமையாக அனையாமல் கடந்த 3 நாட்களுக்கு மேலாக ஆங்காங்கே எரிந்துகொண்டும், புகை மூட்டமாகவும் உள்ளது.இதனால் அப்பகுதில் குடியிருப்போர் சுவாசிக்கவே மிகவும் சிரமப்படும் நிலையில் உள்ளனர். இதையடுத்து அந்த பகுதியில் இனிமேல் குப்பைகளைக் கொட்டக்கூடாது எனவும், தீயை முழுமையாக அனைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியும் அசோகபுரம் ஊராட்சி அலுவலகத்தை அப்பகுதியைச் சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.குப்பைகளை வேறு இடத்தில் கொட்ட நடவடிக்கை எடுப்பதாக ஊராட்சி தலைவர் ரமேஷ் மற்றும் துணைத் தலைவர் சண்முகசுந்தரம் உறுதியளித்தும் பொதுமக்கள் கலைந்து செல்லாமல் ஊராட்சி அலுவலகம் முன்பாக சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

தகவல் அறிந்து அங்கு வந்த துடியலூர் காவல் நிலைய ஆய்வாளர் ஞானசேகரன் அங்கிருந்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் பொதுமக்களிடம் மனுவினைப் பெற்ற ஆய்வாளர் அதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வழியுறுத்துவதாகவும் உறுதியளித்தைத் தொடர்ந்து அங்கிருந்த பொதுமக்கள் கலைந்து சென்றனர்.தொடர்ந்து குப்பைகள் கொட்டப்படும் இடத்தை ஆய்வாளர் ஞானசேகரன், ஊராட்சி தலைவர் ரமேஷ், துணைத்தலைவர் சண்முகசுந்தரம், ஒன்றியக் கவுன்சிலர் கலாமணி சாந்தாராம், கவுன்சிலர்கள் சுதாகர், ஜெயக்குமார், குமார், சங்கீதா, பிரேமா மற்றும் அசோக்குமார், மணிகண்டன், செந்தில்ராஜா, சதகத்துல்லா, சாந்தி, உள்ளிட்டோர் பார்வையிட்டனர். இதையடுத்து எரிந்துகொண்டிருக்கும் தீயை அனைக்க ஊராட்சி நிர்வாகத்தினர் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஆய்வாளர் கேட்டுக்கொண்டார்.

Views: - 74

0

0