காவலர் தேர்வு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு: ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம்

1 November 2020, 6:57 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் காவலர் தேர்வு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து 50க்கும் மேற்பட்ட மாணவர் கூட்டமைப்பினர் துணைநிலை ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரியில் காலியாக உள்ள காவலர் பணியிடங்களை நிரப்ப வரும் 4ஆம் தேதி உடற்தகுதி தேர்வு நடைபெற இருந்தது. இதனிடையே காவலர் தேர்வில் முறைகேடுகள் நடைபெறுவதாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு பல்வேறு புகார்கள் வந்ததை தொடர்ந்து காவலர் தேர்வை தற்காலிகமாக நிறுத்த வைக்க உத்தரவிட்டார். இந்நிலையில் நிறுத்தி வைக்கப்பட்ட காவலர் தேர்வை திட்டமிட்ட படி வரும் 4ஆம் தேதி நடத்தக் கோரி,

மாணவர் கூட்டமைப்பை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் கருப்பு துணியால் கண்களை காட்டிக்கொண்டு துணைநிலை ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்றனர். அப்போது அவர்களை போலீசார் தலைமை தபால் நிலையம் அருகே தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து போலீசாரின் தடுப்புகளின் மீது ஏறி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்றதால் இரு தரப்பினருக்குமிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Views: - 14

0

0