பிரியாங்கா காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து புதுச்சேரியில் மறியல்: நாராயணசாமி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட காங்கிரசார் கைது

Author: kavin kumar
4 October 2021, 3:26 pm
Quick Share

புதுச்சேரி: உ.பி.யில் பிரியாங்கா காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து புதுச்சேரியில் மறியலில் ஈடுபட்ட முன்னாள் முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட காங்கிரசார் கைது செய்யப்பட்டனர்.

உத்தரப் பிரதேசத்தில் உள்ள லக்கிம்பூர் மாவட்டம் பன்வீர்பூர் கிராமத்தில் நேற்று விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டது. இதில் 4 விவசாயிகள் உள்பட 8 பேர் மற்றும் பத்திரிக்கையாளர் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் லக்கிம்பூர் வன்முறையில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரை சந்திக்க பன்வீர்பூர் கிராமத்திற்கு இன்று சென்ற பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டார். இதனைத்தொடர்ந்து பிரியங்கா கைதை கண்டித்தும் விவசாயிகளுக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டதை தடுக்க தவறிய உத்திரப்பிரதேச பாஜக அரசை கண்டித்தும்,

புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ வைத்தியநாதன் உட்பட 100க்கும் மேற்பட்ட காங்கிரசார் அண்ணா சாலையில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அப்போது உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை கண்டித்தும் பிரதமர் மோடியை கண்டித்தும் கண்டன கோஷங்களை எழுப்பியவாறு சாலையில் அமர்ந்து முழக்கமிட்டார்கள். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்க மறியலில் ஈடுபட்ட முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட காங்கிரஸாரை கைது செய்த போலீசார் அவர்களது வாகனத்தில் ஏற்றிச்சென்றார்கள்.

Views: - 215

0

0