உயிரிழந்த 4 மீனவர்களின் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கல்

22 January 2021, 2:07 pm
Quick Share

ராமநாதபுரம்: இலங்கை கடற்படை கப்பல் மோதி உயிரிழந்த 4 மீனவர் குடும்பத்திற்கு முதலமைச்சர் நிவாரண நிதி 10 லட்ச ரூபாயை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வழங்கினார்.

18ஆம் தேதி ஆரோக்கியசேசு என்பவருடைய படகில் மெசியா, நாகராஜ் , செந்தில்குமார் சாம்சங் ஆகிய 4 பேர் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற நிலையில் இலங்கை கடற்படை கப்பல் மோதி 4 மீனவர்களும் பலியாகினர். இதனையடுத்து இலங்கை கடற்படையின் செயலுக்கு தமிழக முதல்வர் கண்டனம் தெரிவித்ததுடன் உயிரிழந்த மீனவர் குடும்பத்திற்கு தலா 10 லட்ச ரூபாய் வழங்குவதுடன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மற்றும் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் மணிகண்டன் ஆகியோர் இலங்கைக் கடற்படைக் கப்பல் மோதி பலியான 4மீனவர் குடும்பத்திற்கு முதலமைச்சர் அறிவித்த 10 லட்ச ரூபாய் நிதியை வழங்கியதுடன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என தெரிவித்தனர்.