பட்டாசு ஆலை வெடி விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கல்

Author: Udhayakumar Raman
27 June 2021, 5:59 pm
Quick Share

விருதுநகர்: பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலியானவர்கள் மற்றும் காயம் அடைந்தவர்களின் குடும்பங்களுக்கு வருவாய்துறை மற்றும் தொழில்துறை அமைச்சர்கள் நிவாரணம் வழங்கினர்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி முன்னிலையில்,வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ். எஸ். ஆர் இராமச்சந்திரன் மற்றும் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிவகாசி மற்றும் சாத்தூர் ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்த குடும்பத்தினர் மற்றும் காயம்பட்டோருக்கு நிவாரணம் வழங்கினர். சாத்தூர் அருகே அச்சங்குளம் பட்டாசு ஆலையில் கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி ஏற்பட்ட வெடி விபத்தில் 26 பேர் உயிரிழந்தனர். மேலும் 20க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.

ஏற்கனவே பலியான 19 பேரின் குடும்பங்களுக்கு கடந்த பிப்ரவரி 26ம் தேதி தலா ரூ. 3 லட்சம் அரசு சார்பில் வழங்கப்பட்டது. மேலும் அச்சங்குளம் பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலியான 4 பேருக்கு தலா 3 லட்சமும் காயம் அடைந்த 16 பேருக்கு தலா 1 லட்சமும் மேலும் மதுரை மாவட்டம் முருகனேரி பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலியான 1 நபருக்கும் காயம் அடைந்த 1 நபர் என என மொத்தம் 20 பேருக்கு ரூ.29 லட்சம் நிவாரணத்தை மாநில வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன் மற்றும் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் வழங்கினர்.

Views: - 177

0

0