தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவியின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கல்

22 September 2020, 5:34 pm
Quick Share

திருவள்ளூர்: சோழவரம் அருகே ஆன்லைனில் பாடம் புரியாததால் தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவியின் குடும்பத்தினரை சந்தித்து பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் ஆறுதல் தெரிவித்து ஒரு லட்சம் நிவாரணம் வழங்கினார்.

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருமந்தை கிராமத்தை சேர்ந்தவர் கிரி இவரது மகள் தர்ஷினி. இவர் சென்னை அரசு மகளிர் கல்லூரியில் பிஎஸ்சி படித்து வந்த நிலையில் ஆன்லைன் பாடம் புரியவில்லை என தனது தாய் சரிதாவிடம் கூறி வந்த நிலையில், கடந்த 19 ஆம் தேதி வீட்டில் கதவை உட்புறமாக தூக்கிட்டு தற்கொலை செய்து செய்து கொண்டார். அவரது குடும்பத்தினரை பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் பலராமன் சந்தித்து ஆறுதல் தெரிவித்து ஒரு லட்ச ரூபாய் நிதி உதவி வழங்கினார். அப்போது அவரிடம் பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி அவரை முற்றுகையிட்டு கோரிக்கை மனு அளித்தனர். அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றி தருவதாக அவர் உறுதி அளித்தார்.

Views: - 8

0

0