படுகாயமடைந்த கூலி தொழிலாளிக்கு உதவித் தொகை வழங்கல்

22 September 2020, 2:14 pm
Quick Share

நீலகிரி: உதகையில் பெய்துவரும் கனமழையால் வீட்டின் மீது மரம் விழுந்து படுகாயமடைந்த கூலி தொழிலாளிக்கு நீலகிரி மாவட்ட அதிமுக மாவட்ட கழக செயலாளர் கப்பச்சி வினோத் 10,000 உதவித் தொகை வழங்கினார்.

உதகை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 2 நாட்களுக்கும் மேலாக சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது இதனால் பல பகுதிகளில் மரங்கள் விழுந்து சாலைகள் துண்டிப்பு ஆனது. மாவட்ட நிர்வாகம் சார்பில் கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் யாரும் இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் உதகை அருகே பிங்கர் போஸ்ட் பகுதியில் கனமழை பெய்ததால் மரம் வீட்டின் மீது விழுந்ததில் மதிமாறன் எனும் கூலித் தொழிலாளி படுகாயம் அடைந்தார்.

படுகாயமடைந்த கூலித்தொழிலாளி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் நீலகிரி மாவட்ட அதிமுக கழக செயலாளர் கப்பச்சி வினோத் நேரில் சென்று ரூபாய் பத்தாயிரம் உதவித்தொகை வழங்கினார். மேலும் காட்டுமாடு தாக்கி படுகாயம் அடைந்த தொழிலாளிக்கும் உதவித்தொகையை வழங்கி மருத்துவரிடம் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களின் நிலையை கேட்டறிந்தார்.

Views: - 0

0

0