அய்யாவைகுண்டசுவாமி உதயநாளுக்கு பொதுவிடுமுறை: ஸ்டாலின் உறுதியளித்திருப்பதாக சாமிதோப்பு பாலஜனாதிபதி தகவல்

28 February 2021, 4:07 pm
Quick Share

கன்னியாகுமரி: அய்யாவைகுண்டசுவாமி உதயநாளுக்கு பொதுவிடுமுறை அளிக்கபடும் என்று தமிழக எதிர்கட்சிதலைவர் ஸ்டாலின் உறுதியளித்திருப்பதாக சாமிதோப்பு பாலஜனாதிபதி தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது :- இந்த ஆண்டு அய்யாஉதயதினத்தில் வழக்கமாக திருவனந்தபுரத்திலிருந்து நாகர்கோவில் வழியாக சாமிதோப்பு வரும் வாகனபேரணி இந்த ஆண்டு கொரோனா காரணமாக அங்கிருந்து வரும் வாகனபவனி ரத்துசெய்யப்பட்டுள்ளது.ஆனால் திருசெந்தூரில் இருந்து வாகனபேரணி வரும்.அய்யா உதயநாளுக்கு நான்குமாவட்டத்திற்கு பொதுவிடுமுறையும்,தமிழகம் முழுவதும் வரையறுக்கப்பட்ட விடுமுறை விடப்பட்டது. ஆனால் தமிழகம் முழுவதும் பொதுவிடுமுறை அறிவிக்க வேண்டும் என்ற அய்யாவழி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் தேர்தல்பிரசாரத்திற்கு சாமிதோப்புக்கு வரும் போது அய்யாவழிமக்களின் கோரிக்கைபடிபடியாக நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்தார். ஆனால் கடந்த பத்து ஆண்டுகளாக இந்த கோரிக்கை நிறைவேற்றப்படாமல் உள்ளது.இந்த கோரிக்கைகள் அனைத்தும் எதிர்கட்சிதலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்தபோது பொதுவிடுமுறை கோரிக்கையை வைத்தேன்.தி்முக ஆட்சிஅமைந்ததும் தமிழகம்முழுவதும் பொதுவிடுமுறை கோரிக்கை கட்டாயம் நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்துள்ளார். மேலும் அய்யாவழிபாடு,இந்துசமய அறநிலையதுறையின் சட்டதிட்டத்திற்கு பொருந்தாது என்பதை நிரூபிக்க வேண்டும் என்று பால.ஜனாதிபதி தெரிவித்தார்.

Views: - 1

0

1