வெடி குண்டுகள் செயலிழக்கும் பணிக்கு பொதுமக்கள் எதிர்ப்பு: பணிகளை தற்காலிகமாக நிறுத்திய ராணுவத்தினர்

23 March 2021, 6:34 pm
Quick Share

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அருகே வெடி குண்டுகளை செயல் இழக்க செய்வதால் ஏற்படும் அதிர்வால் வீடுகளில் விரிசல் ஏற்படுவதால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் வெடிகுண்டுகளை செயலிழக்கும் செய்வதை தற்காலிகமாக ராணுவத்தினர் காவல் துறையினர் நிறுத்தி வைத்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் பகுதியில் கடந்த 2008 ஆம் ஆண்டு இரும்பு உருக்கு ஆலைகளில் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 10 டன் வெடி குண்டுகள் ராக்கெட் லாஞ்சர்கள் பயன்படுத்தப்பட்ட இரும்பு பொருட்களை வைத்திருந்த நிலையில், மாதர்பாக்கம் பாதிரிவேடு காவல் எல்லைக்குட்பட்ட ராமச்சந்திராபுரம் கிராமத்தில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வெடி குண்டுகளை செயலிழக்கும் பணியை திருவள்ளூர் மாவட்ட காவல் துறையினர் ராணுவத்தினருடன் இணைந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெடிகுண்டுகளை செயலிழக்க வைத்தனர்.

இதனால் அப்பகுதியில் அதிர்வுகள் ஏற்பட்டு வீடுகளில் விரிசல் ஏற்படுவதாக கூறி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் மாதர்பாக்கம் காவல்துறையினர் அவர்களிடம் சமரசம் மேற்கொண்டு தற்காலிகமாக வெடிமருந்துகளை செயலழக்கம் செய்யாமல் நிறுத்தி வைத்துள்ளனர். இன்னும் இரண்டு நாட்களில் அனைத்து வெடிகுண்டுகளையும் செயலிழக்கும் பணிகளும் நிறைவடைய இருந்த நிலையில், அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் தற்காலிகமாக வெடிகுண்டுகளை செயலிழக்கும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Views: - 13

0

0