அரசு நடுநிலைப் பள்ளியை தரம் உயர்த்தி தர கோரி பொதுமக்கள் மனு
Author: kavin kumar17 August 2021, 1:56 pm
வேலூர்: காட்பாடி அருகேயுள்ள அருப்புமேடு பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை தரம் உயர்த்தி கொடுக்கமாறு அருப்புமேடு பகுதி பொதுமக்கள் சார்பாக வேலூர் ஆட்சியருக்கு மனு அளிக்கப்பட்டது.
அம்மனுவில், வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டம் அருப்புமேடு பகுதியில் உள்ள ஊராட்சி நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்துவதற்கான கருத்துருவும் பொதுமக்கள் பங்களிப்பு தொகையாக ஒரு லட்சம் ரூபாய் மற்றும் உயர்நிலைப் பள்ளி அமைவத்திற்கான இடம் ஆகியவற்றை இணைத்து கடந்த 2020 ஆண்டு மார்ச் மாதம் தகுந்த வழிகாட்டுதளின் படி ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டது. இப்பள்ளியில் சுமார் 220 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் பயின்று வருகின்றனர். அதிலும் பெரும்பாலானோர் ஏழ்மை நிலையிலுள்ள வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் என்பது குறிப்பிடதக்கது.
இங்கு பயிலும் மாணவ, மாணவியர்கள் உயர்நிலை படிப்பை தொடர பல கிலோ மீட்டர் பேருந்தில் செல்ல வேண்டியுள்ளது. மேலும் இவ்வூரில் இருந்து பயணம் செய்ய தகுந்த பேருந்து வசதியும் இல்லை. இதனால் பெண் குழந்தைகளின் கல்வி கேள்வி குறியாகவே உள்ளது. எனவே மேற்கூறிய காரணங்களை கருத்தில் கொண்டு மாவட்ட ஆட்சியர் அவர்கள் எங்களது பள்ளியை ஆய்வு செய்து தரம் உயர்த்தி தருமாறு அம்மனுவில் தெரிவிக்கப் பட்டுள்ளது. மனு அளிக்க அருப்புமேடு பகுதி சார்பாக ஊர் பெரியோர்கள் கே.ஜி. சேகர் கே.வேலு ஆறுமுகம் எம்.என்.சேகர் எம்.ஜோதி மற்றும் ராஜேந்திரன் ஆகியோர் மனு அளித்தனர்.
0
0