அரசு ஆதிதிராவிட பள்ளி பொருட்களை அனுமதியின்றி எடுத்துச் செல்ல மக்கள் எதிர்ப்பு

25 September 2020, 3:55 pm
Quick Share

திருச்சி: லால்குடி அருகே அரசு ஆதிதிராவிட பள்ளி பொருட்களை அனுமதியின்றி எடுத்துச் செல்ல மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் பரபரப்பை ஏற்பட்டது.

திருச்சி மாவட்டம், லால்குடி பேரூராட்சி பகுதியில் உள்ளது எல். அபிஷேகபுரம் கிராமம். இந்த கிராமத்தில் 1928 ம் ஆண்டு ஆதிதிராவிட ஆரம்ப பள்ளிக் கட்டடம் கட்டியுள்ளனர். இந்த கட்டடம் மேல் கூரை ஓடுகளாலும், ஓடுகளை தாங்கிப்பிடிக்க தேக்கு மரங்களால் ரீப்பர், மற்றும் பக்கவாட்டு தூண்கள் அமைக்கப்பட்டிருந்தன. இக் கட்டடம் தரமாக இருந்த நிலையில் மேற்கூரையான ஓடுகள் மட்டும் சில இடங்களில் உடைந்து காணப்பட்டது. இதனை மாற்ற பள்ளித் தலைமையாசிரியை திருச்சி மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை வட்டாட்சியரிடம் கடந்த 3 மாதங்களுக்கு முன் மனு கொடுத்துள்ளார்.

இதற்கான எந்த உத்தரவும் பிறப்பிக்காத நிலையில் திருச்சி பாலக்கரை பகுதியைச் சேர்ந்த சிலர் இப் பகுதியில் உள்ள ஆதிதிராவிட பள்ளிக்கு வந்து மேற்கூரையில் இருந்த ஓடுகள் மற்றும் பழமையான தேக்கு மர தூண்களையும் கழட்டி எடுத்து லாரியில் ஏற்றிக் கொண்டிருந்தனர். இது குறித்து பள்ளித் தலைமையாசிரியையிடம் அப்பகுதி மக்கள் மற்றும் இளைஞர்கள் கேட்டதற்கு எனக்குத் தெரியாதென கூறியுள்ளார். இதனை அடுத்து அப்பகுதி பொதுமக்கள் அனுமதி கடிதம் இருந்தால் மட்டுமே பள்ளியிலிருந்து எடுத்தப் பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதிப்போம் எனக்கூறியதால் வேறு வழியின்றி ஏற்றிய பொருட்கள் அனைத்தையும் அதே பள்ளியிலேயே இறக்கி வைத்துவிட்டு சென்றனர்.

இது குறித்து திருச்சி மாவட்ட ஆதிதிராவிட நல வட்டாட்சியரிடம் கேட்ட போது பள்ளி தலைமையாசிரியை கூறியதால் தான் இந்த சம்பவம் நடந்ததாக எனக்குத் தெரியவந்தது. இதனால் பள்ளியிலிருந்து எடுத்த பொருட்களை பள்ளியிலேயே வைக்க உத்தரவிட்டுள்ளேன். எதன் அடிப்படையில் பொருட்களை எடுத்துச் சென்றனர் என விசாரணை செய்யவுள்ளேன் என்றார்.

Views: - 1

0

0