கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா நடத்த கோரி பொதுமக்கள் போராட்டம்

12 April 2021, 1:56 pm
Quick Share

மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோவில் மற்றும் கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா வழக்கம் போல் நடத்தகோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

மதுரை மீனாட்சியம்மன் கோவில் மற்றும் கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் வெகுவிமர்சையாக நடைபெறும். கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக விழாவானது பக்தர்கள் அனுமதியின்றி ஆகமவிதிப்படி நடத்தப்பட்டது. இதனையடுத்து கொரோனா பரவல் குறைந்தநிலையில் கோவில்களில் வழிபட பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில்,

தற்போது இரண்டாம் கட்ட கொரோனா பரவல் அதிகரித்துவருவதால் இந்த ஆண்டு நடைபெறும் மதுரை சித்திரை திருவிழாவினை பக்தர்கள் அனுமதியின்றி நடைபெறும் என அறிவிப்பு வெளியிட்ட நிலையில், அரசின் இந்த முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சித்திரை திருவிழா எப்போதும் போல பக்தர்கள் அனுமதியோடு நடத்தகோரியும் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மதுரை தமுக்கம் மைதானம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் பெண்கள், இளைஞர்கள், சிறுவர்கள் என அனைத்து தரப்பினரும் கலந்துகொண்டு மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Views: - 47

0

0