ஜவுளி பூங்கா வேண்டாம் என பொது மக்கள் போராட்டம்: மாவட்ட ஆட்சியரிடம் வருவாய் வட்டாட்சியர் பரிந்துரை

By: Udayaraman
9 October 2020, 8:10 pm
Quick Share

விருதுநகர்: காரியாபட்டி அருகே முதல்வர் அடிக்கல் நாட்டிய ஜவுளி பூங்கா வேண்டாம் என பொது மக்கள் போராட்டம் சமாதான பேச்சு வர்த்தை தோல்வி அடைந்த நிலையில், ஊராட்சி நிர்வாகத்தில் ஒப்புதல் இல்லை என மாவட்ட ஆட்சியரிடம் வருவாய் வட்டாட்சியர் பரிந்துரை செய்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பகுதியில் உள்ள துலுக்கன்குளம் ஊராட்சியைச் சேர்ந்தது தாமரைக்குளம் பொட்டல்குளம் கிராமத்தில் ஜவுளி பூங்கா அமைப்பதற்காக தமிழக அரசு அடிக்கல் நாட்டி நடவடிக்கை எடுத்து உள்ளது. இந்த நிலையில் இந்த இடத்தில் அமைந்தால் ஜவுளி பூங்காவில் அமைக்கப்படும் சாயப்பட்டறை கழிவுநீர் வெளியேறி விவசாய நிலங்கள் பாதிக்கப்படும். இதனால் விவசாயம் முற்றிலும் அழியும் எனக்கூறி அப்பகுதி மக்கள் ஜவுளி பூங்கா அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில தினங்களுக்கு முன்பு போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் இது தொடர்பாக கிராம மக்களிடம் சமாதான கூட்டம் தாசில்தார் தனக்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் அருப்புக்கோட்டை டி.எஸ்.பி சகாய ஜோஸ், திருச்சுழி டி.எஸ்.பி ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டார்.

பேச்சுவார்த்தையின் போது அந்தப் பகுதியை சேர்ந்த தாமரைக்குளம், காரைக்குளம், எசலிமடை, செட்டிகுளம், கீழ காஞ்சிரங்குளம், மேல காஞ்சிரங்குளம், துலுக்கன்குளம், சி.புதூர் கிராமங்களை சேர்ந்த பொது மக்கள், தங்களுடைய விவசாய நிலம் பாதிப்படையும், நிலத்தடி நீர்மட்டம் குறையும் என்றும், எனவே இப்பகுதியில் ஜவுளி பூங்கா அமைக்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் மக்களின் வாழ்வதாரமான விவசாயத்தை சீரழிக்கும் சாயபட்டறைக்கு ஒரு போதும் துலுக்கன்குளம், சூரனூர் ஆகிய ஊராட்சி நிர்வாகத்தில் இருந்து ஒப்புதல் தரமாட்டோம் என்றனர். கிராம மக்கள் சார்பாக ஊராட்சி தலைவர்கள் கூறியதால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து அந்த இடத்தில் ஜவுளி பூங்கா அமைக்க பொதுமக்கள் ஒத்துழைக்கவில்லை என வட்டாட்சியர் தன்ராஜ் மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரை கடிதத்தை வழங்கினார்.

Views: - 73

0

0