கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்களை கைது செய்ய கோரி பொதுமக்கள் சாலை மறியல்

Author: Udayaraman
3 August 2021, 8:50 pm
Quick Share

கோவை: துடியலூரில் கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்களை கைது செய்ய கோரி மேட்டுப்பாளையம் சாலையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கோவை துடியலூர் ரயில்வே ஸ்டேசன் ரோடு பகுதிகளில் கஞ்சா போதையில் சில இளைஞர்கள் அட்டகாசம் செய்துவந்ததாக அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.மேலும் அந்த இளைஞர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டதாகவும் தெரிகிறது. புகாரைத் தொடர்ந்து நேற்று 2 இளைஞர்களை அழைத்து வந்து போலிசார் விசாரணை நடத்தி விடுவித்துள்ளனர். இந்நிலையில் அந்த இளைஞர்கள் புகார் அளித்த இளைஞர்களை இன்று வீட்டுக்கு சென்று தாக்கியதாக கூறி அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் 50 க்கும் மேற்பட்டோர் துடியலூர் பேருந்து நிறுத்தத்தில் கோவை மேட்டுப்பாளையம் சாலையில் அமர்ந்து சாலைமறியலில் ஈடுபட்டனர்.

சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கஞ்சாவால் இளைஞர்கள் சீரழிவதாக கூறி கஞ்சா விறபனை செய்பவர்களை கைது செய்யக்கோரி கோசங்களை எழுப்பினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த துடியலூர் காவல் துறையினர் தாகுதலில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து சாலைமறியலை கைவிட்டனர். இதனால் கோவை மேட்டுப்பாளையம் சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Views: - 99

0

0