வாய்க்காலை சீர் செய்ய கோரி பொதுமக்கள் சாலை மறியல்

Author: Udhayakumar Raman
27 November 2021, 1:48 pm
Quick Share

அரியலூர்: ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள வாய்க்காலை சீர் செய்ய கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அரியலூர் மாவட்டம் புதுப்பாளையம் கிராமத்தில் தொடர் மழையால் தீர்த்தான் ஏரி நிரம்பி நீர் வடிகால் வாய்க்கால் வழியாக சென்று ஒடையில் சென்று  மருதையாற்றில் கலக்கும் நிலையில் வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்பு காரணத்தால் மீண்டும் வெள்ள நீர் அதே வாய்க்கால் வழியாக கிராமத்தை சூழ்ந்தது. இதனால் ஆக்கிரமிப்பை எடுத்து வடிகாலை சீர் செய்ய வேண்டும் என பொது மக்கள் குற்றம் சாட்டி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் திருச்சி – சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து  பாதிப்பு பாதிக்கபட்டது. இதனையடுத்து கீழப்பழுவூர் போலீசார் பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததின் பேரில் அவர்கள் கலைந்து சென்றனர்.

Views: - 130

0

0