மண் குவாரி செயல்பட எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம்: மண் அள்ள வந்த இயந்திரத்தின் கண்ணாடி உடைப்பு…

10 September 2020, 1:43 pm
Quick Share

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே மண் குவாரி செயல்பட எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுப்டட போது, மண் அள்ள வந்த இயந்திரத்தின் கண்ணாடி உடைத்த இருவரை அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள புதுவாயல் கிராமத்தில் உள்ள ஏரியில் புதியதாக மண் குவாரி விடப்பட்ட அங்கு மண் எடுக்கும் பணிகளுக்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனிடையே அங்கு 2 பொக்லைன் எந்திரம் மூலம் மண் எடுக்க வந்ததால் அதனை தடுக்க முயன்றதால் பொக்லைன் எந்திரத்தை கல்வீசி கண்ணாடியை உடைத்தால் அங்கிருந்த பொதுமக்களை விரட்டி அடித்தனர்.

இதனால் புதுவாயல் கிராமத்தைச் சேர்ந்த ஆகாஷ், விநாயகம் ஆகிய இருவரை கவரைப்பேட்டை காவல்நிலையம் போலீசார் அழைத்து சென்றதால் கிராமத்தினர் கவரப்பேட்டை காவல் நிலையத்தை முற்றுகையிட்டு அவர்களை விடுவிக்க கோரியும் தங்கள் பகுதியில் கரும்பு ஆலை அமைப்பதற்கு தாங்கள் வழங்கிய இடத்தில் மண் அல்ல அனுமதிக்க மாட்டோம், குடிநீர் ஆதாரம் பாதிக்கப்படும் எனக்கூறி சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Views: - 0

0

0