தீபாவளியை முன்னிட்டு உலா வரும் பொதுமக்கள்: மாஸ்க் அணியாமல் வரும் பொது மக்களால் நோய்த் தொற்று பரவும் அபாயம்

Author: kavin kumar
31 October 2021, 8:31 pm
Quick Share

கரூர்: தீபாவளி பண்டிகை வருவதை முன்னிட்டு கரூரில் பொதுமக்கள் மாஸ்க் அணியாமல் வருவதால் நோய்த் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

வரும் நவம்பர் 4-ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று ஞாயிறு விடுமுறை நாள் என்பதினால் பொதுமக்கள் தங்களது குடும்பத்திற்கு புத்தாடை எடுக்கவும், பொருட்கள் வாங்க கரூர் நகரின் பல்வேறு பகுதிகளில் கூட்டம், கூட்டமாக குவிந்து வருகின்றனர். குறிப்பாக கரூர் ஜவகர் பஜார், கரூர் பசுபதீஸ்வரர் ஆலய சுற்றுப்புற பகுதிகளிலும் தரைக்கடைகள் அமைக்கப்பட்டும், மக்களின் கூட்ட்த்தினை கவரும் வகையில் விலை குறைந்த விலையில் தரைக்கடை வியாபாரிகள் விற்று வருகின்றனர். அதே போல். நகரில் உள்ள ஜவுளி கடைகள் மற்றும் நகை கடைகளிலும் கூட்டம் கட்டுக்கு அடங்காமல் அலைமோதுகிறது. மேலும் கொரோனா விதிமுறைகள் இன்றும் அமலில் உள்ள நிலையில், பொதுமக்கள் ஏராளாமனோர் மாஸ்க் அணியாமலும்,

சமூக இடைவெளி இல்லாமல் வருவதால் கொரோனா தொற்று பரவும் நிலையும், கொரோனா மூன்றாம் அலைக்கு வழிவகுக்கும் வகையிலும் கூட்டம் இருந்து வருகின்றது. மேலும், கடந்த ஆண்டு ஒட்டு மொத்த கடைகளையும் கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் அமைத்து அங்கேயே ஒரு சேர வாங்கும் விதத்தில் மாவட்ட நிர்வாகம் செய்திருந்த நிலையில், தற்போது இந்த ஆண்டு, அந்த திருவள்ளுவர் மைதானம் ஆனது எங்கு வேண்டுமானாலும் ஜவுளி மற்றும் நகைகளை வாங்குங்கள், ஆனால் வாகனங்களை மட்டும் இங்கு வந்து டோக்கன் போட்டு கொள்ளுங்கள் என்று சொல்லும் அளவிற்கு இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பார்க்கிங் செய்வதற்காக மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. அதுவும் இருசக்கர வாகனங்களுக்கு ரூ 5 ம்., கார்களுக்கு ரூ 10 ம் வசூல் செய்யப்படுகின்றது. அது மட்டுமில்லாமல், ஆங்காங்கே கடைகளும் உள் வாடகைக்கு விடப்பட்டு வருகின்றது.

Views: - 167

0

0