தடுப்பூசி போடுவதற்காக காத்திருந்த பொதுமக்கள்: ஒரு சிலருக்கு மட்டும் தான் ஊசி செலுத்த முடியும் கூறிய மருத்துவமனை ஊழியர்கள்

14 July 2021, 1:53 pm
Quick Share

இந்தியா முழுவதும் கடந்த மார்ச் முதல் வைரஸ் தொற்று ஆரம்பமாகி தொடர்ந்து அதிகரித்து வருவதால் மத்திய அரசு இந்தியாவில் உள்ள அனைவரும் வைரஸ் தொற்றை தடுக்கும் வண்ணம் தடுப்பூசி செலுத்த வேண்டுமென தடுப்பூசி முகாம் நடத்தி வருகிறது. இந்நிலையில் தமிழகத்திலும் தொடர்ந்து வைரஸ் தொற்று அதிகம் பரவியது. தற்போது தடுப்பூசி முகாம் மூலம் தொடர்ந்து செலுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கடந்த சில வாரங்களாகவே வைரஸ் தொற்று தடுப்பூசி தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. இந்நிலையில் திண்டுக்கல் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்துவதற்காக திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து பல்வேறு இடங்களில் இருந்து தடுப்பூசி செலுத்துவதற்காக கடந்த 5 நாட்களாக மருத்துவமனை பொதுமக்கள் வந்து செல்வதாகவும்,

இவர்கள் தொடர்ந்து காரணம் சொல்லி வந்த நிலையில் இன்று தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என காலை 5 மணிக்கு வந்து வரிசையில் நின்று உள்ளனர். தொடர்பு பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வந்து நீண்ட வரிசையில் சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்த நிலையில், திடீரென தடுப்பூசி தீர்ந்துவிட்டது. ஒரு சிலருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்த முடியும் என ஒரு சிலருக்கு மட்டும் முன் பதிவுக்கான அட்டையை மட்டும் கொடுத்துவிட்டு மற்றவர்களை தடுப்பூசி வந்தவுடன் வாருங்கள் என சர்வ சாதாரணமாக சொல்லிவிட்டு ஆஸ்பத்திரி ஊழியர்கள் சென்றுவிட்டனர்.

கடந்த 5 நாட்களாக தொடர்ந்து தடுப்பூசி செலுத்துவதற்காக வந்த பொதுமக்கள் எப்பொழுது தடுப்பூசி வரும் எவ்வளவு இருக்கிறது என்று கூட சொல்லாமல் மருத்துவமனை நிர்வாகம் பொது மக்கள் மீது அக்கறை இல்லாமல் உள்ளனர். தமிழக அரசு தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகங்களில் தினமும் மருத்துவமனை மற்றும் சமூக ஆர்வலர்கள் மூலம் முகாம்கள் நடத்தி தடுப்பூசி பற்றாக்குறை இல்லாமல் முகாம் நடத்தி வருவதாக கூறி வருகின்றனர்.இதை நம்பி நாங்கள் அருகில் உள்ள கிராமத்தில் இருந்து எங்களது வேலையையும் விட்டுவிட்டு இங்கு வருகிறோம்.

ஒரு சிலர் கூலி வேலைக்குச் செல்கின்றனர். கூலி வேலைக்கு சென்று தான் எங்கள் குடும்பத்தை நடத்த வேண்டும். அப்படி இருக்கும் பொழுது சம்பளத்தை விட்டுவிட்டு தடுப்பு முகாமுக்கு வந்தால் இவர்கள் சரியான பதிலைச் சொல்வது கிடையாது. அப்படி என்றால் தமிழக அரசு விளம்பரப்படுத்துவது பக்ஷ போலியா அல்லது இவர்கள் தடுப்பூசியை வேறு எங்கும் மாற்றி விடுகிறார்கள் என்பது எங்களுக்கு கேள்விக்குறியாக உள்ளது. தடுப்பூசி முகாம் நடைபெறுவது என்றால் எத்தனை பேருக்கு தரமுடியும் என்பதை முதலிலேயே சொல்லி விட்டால் நாங்கள் அதற்கு ஏற்றார்போல் தடுப்பு முகாமில் கலந்து கொள்வோம் என வேதனையுடன் தெரிவித்தனர்.

Views: - 127

0

0