7 சட்டமன்ற தொகுதிக்கு வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

16 November 2020, 5:58 pm
Quick Share

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிக்கு வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆடசியர் கண்ணன் அங்கீகரிக்க பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்பு வெளியிட்டார்.

விருதுநகர், சிவகாசி, சாத்தூர், அருப்புக்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், திருச்சுழி ஆகிய 7 சட்டமன்ற தொகுதிகளில் மொத்த வாக்காளர்கள் 16 லட்சத்து 27 ஆயிரத்து 128 பேர் வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 7 லட்சத்து 93 ஆயிரத்து 864 பேரும், பெண் வாக்காளர்கள் 8 லட்சத்து 33ஆயிரத்து 081 பேரும், இதரர் 183 வாக்காளர்கள் உள்ளனர். இதுகுறித்து வரைவு வாக்குப் பட்டியலை அனைத்து கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் கண்ணன் வெளியிட்டார்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் கண்ணன், விருதுநகர் மாவட்டத்தில் கடந்து முறை உள்ள பட்டியலை விட 4,186 புதிய வாக்காளர் சேர்க்கப்பட்டு இருப்பதாகவும், மேலும் இறப்பு இடம் பெயர்தல் இரட்டைப் பதிவு காரணமாக 7385 அவர்கள் நீக்கப்பட்டு இருப்பதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். மேலும் தற்போது உள்ள வாக்காளர் பட்டியலில் திருத்தம் மற்றும் பெயர் சேர்த்தல் தொடர்பான மனு இன்று முதல் வரும் டிசம்பர் மாதம் 15ஆம் தேதி வரை பெறப்பட்டு, அதைத் தொடர்ந்து 2021 ஜனவரி 20ஆம் தேதி இறுதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் எனவும்,

வாக்காளர் பட்டியலில் விண்ணப்பங்கள் அளிக்க ஆன்லைன் மற்றும் சிறப்பு முகாம்களை பொதுமக்கள் பயன்படுத்தலாம், சிறப்பு முகாம்கள் நவம்பர் 21 மற்றும் 22ம் தேதிகளில் டிசம்பர் 12 மற்றும் 13ஆம் தேதி அந்தந்த வாக்குச்சாவடிகளில் நடைபெறும் எனவும் ஆட்சியர் கண்ணன் தெரிவித்தார்.

Views: - 17

0

0