மின் கட்டண உயர்வை கண்டித்து போராட்டம் நடத்த பாஜகவினருக்கு அருகதையில்லை: நாராயணசாமி குற்றச்சாட்டு
29 September 2020, 9:13 pmபுதுச்சேரி: ஜிப்மர் மருத்துவக்கல்லூரியில் புதுச்சேரி மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு கண்டிப்பாக கிடைக்கும் என முதல்வர் நாராயணசாமி உறுதியளித்துள்ளார்.
புதுச்சேரியில் இன்று செய்தியாளர்களை முதல்வர் நாராயணசாமி சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில்,” புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள ஜிப்மர் மருத்துவக்கல்லூரிகளில் இனி மத்திய மருத்துவக்கழகம் தான் கலந்தாய்வு நடத்தி மாணவர் சேர்க்கை நடத்தும் என்ற நடைமுறை ஏற்பட்டிருப்பதால் புதுச்சேரி மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டிற்கு ஆபத்து என்று சமூக வலைதளங்களில் சிலர் அவதூறு பரப்பி வருகின்றார்கள். 200 மருத்துவ இடங்களை கொண்ட ஜிப்மர் மருத்துவக்கல்லூரியில் மாணவர் சேர்க்கையில் புதுச்சேரி மாணவர்களுக்கான 54 இடங்களுக்கான ஒதுக்கீடு கட்டாயம் கிடைக்கும் இது பற்றிய அச்சம் தேவையில்லை என்றும் தவறான வதந்திகளை நம்பவேண்டாம்.
இது குறித்து ஜிப்மர் நிர்வாகம் மற்றும் மத்திய மருத்துவக்கவுன்சிலிடமும் விசாரித்து உறுதி செய்துள்ளதாகவும் தவறான தகவல்களை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க காவல் துறையினருக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்த நாராயணசாமி, புதுச்சேரியில் மின்கட்டண உயர்வு குறித்து விமர்சனம் செய்யவோ போராட்டம் நடத்தவோ பாஜக வினருக்கு அருகதையில்லை என்றும் யூனியன் பிரேதசமான புதுச்சேரிக்கு மின் கட்டணத்தை நிர்ணையம் செய்வது மின்சார ஒழுங்கு முறை இணை ஆணையம் தான், மேலும் இந்த இதை நிர்வகிப்பது மத்திய பாஜக அரசு தான் இதில் மாநில அரசுக்கு எந்தவித அதிகாரமும் இல்லை, எனவும் மத்திய அரசை கண்டித்துதான் பாஜக போராட்டம் நடத்த வேண்டும் என நாராயணசாமி தெரிவித்துள்ளார்.