3 மசோதாக்களை திரும்பப் பெறக் கோரி வரும் 28ம் தேதி புதுச்சேரியில் ஆர்ப்பாட்டம்: முதலமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு
26 September 2020, 11:32 pmபுதுச்சேரி: மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் நாராயணசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:- இந்திய கலாச்சார பரிமாணம் குறித்து ஆராய மத்திய கலாச்சார துறை சார்பில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகம், புதுச்சேரியில் இருந்து யாரையும் சேர்க்காதது கண்டிக்கதக்கது. ஆகவே அனைத்து மாநிலங்களை சேர்ந்தவர்களையும் இக்குழுவில் இடம் பெற வேண்டும் என பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன். எஸ்.பி. பாலசுப்ரமணியன் மறைவு கலை உலகத்திற்கு மிகப்பெரிய பேரிழப்பு.
அவருக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் வேண்டுகோள் விடுப்பதாகவும், விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு நிறைவேற்றியுள்ள 3 மசோதாக்களை திரும்பப்பெறக்கோரி வரும் 28ஆம் தேதி புதுச்சேரியில் 7 இடங்களிலும், காரைக்காலில் 2 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தல்படி சமூக இடைவெளியை கடைபிடித்து 100பேர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பார்கள் என்றும் விவசாயிகளை காப்பாற்ற போராட்டம் தொடரும் எனவும் தெரிவித்தார்.