முதலில் அரசியல் பிரமுகர்கள் தடுப்பூசி போட அனுமதியளிக்க வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!

12 January 2021, 8:34 pm
Quick Share

புதுச்சேரி: கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதில் ஏற்படும் அச்சத்தை போக்க முன்னுதாரமாக அரசியல் கட்சி தலைவர்கள் அமைச்சர்களுக்கு முதற்கட்டமாக தடுப்பூசி வழங்க வேண்டும் என் பிரதமருக்கு முதல்வர் நாராயணசாமி கடிதம் எழுதியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் நாராயணசாமி புதுச்சேரி மற்றும் காரைக்காலில் தடுப்பூசி போடும் மையங்கள் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் முதல் கட்டமாக சுமார் 14ஆயிரம் நபர்களுக்கு தடுப்பூசி போட திட்டமிட்டுள்ளதாக தெரிவித்த அவர், பிரதமருடன் நேற்று நடைபெற்ற முதலமைச்சர் கூட்டத்தில் மேற்கு வங்கம் மற்றும் புதுச்சேரி முதலமைச்சர்கள் தடுப்பூசிக்கு என்ன உத்திரவாதம் உள்ளது என்றும் பக்க விளைவுகள் ஏதும் ஏற்படாதா என கேள்வி எழுப்பியதாகவும், அதற்கு அவசர காலம் என்பதால் மருத்துவர்கள் அனுமதி அளித்துள்ளதாகவும், பரிசாத்ய முறையில் சோதனை செய்யப்பட்டதால் அனுமதி அளித்ததாக பிரதமர் விளக்கமளித்துள்ளதாக நாராயணசாமி தெரிவித்தார்.

மேலும் முதல் கட்டமாக மருத்துவ பணியாளர்களுக்கும், இரண்டாவது கட்டமாக காவல்துறை, துப்புரவு பணியாளர்களுக்கும், மூன்றாவது 50வயதுக்கும் மேற்பட்டோருக்கு, 4வது கட்டமாக அனைத்து தரப்பினருக்கும் போடப்படும் என பிரதமர் தெரிவித்ததாகவும், இருப்பினும் இந்த கொரோனா தடுப்பூசிகளை மத்திய அரசே இலவசமாக கொடுக்கிறார்கள என தெளிவு படுத்த வேண்டும் மேலும் கொரோனா தடுப்பூசி அனைத்து மக்களுக்கும் கொடுப்பார்களா என தெரியவில்லை. ஆகவ மத்திய அரசு இலவசமாக அளித்தாலும், அளிக்காவிட்டாலும் மாநில அரசு முழுமையாக செலவை ஏற்றுக்கொண்டு புதுச்சேரி மாநில அரசின் நிதியிலிருந்து மாநில மக்கள் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்படும் என தெரிவித்த நாராயணசாமி,

மக்களுக்கும் தடுப்பு ஊசி போட்டுக் கொள்ளலாம் என்ற என்னம் இருக்க வேண்டும், அச்சம் இருக்க கூடாது. மேலும் மக்கள் மத்தியில் தடுப்பூசி குறித்து சந்தேகம் உள்ளது, இந்நிலையில் அரசியல் வாதிகள் தடுப்பூசி போட்டுக்கொள்வதில் முந்திக்கொள்ளக்கூடாது என பிரதமர் கூறியுள்ளார். ஆனால் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வகைவகையில் அரசியல் கட்சி தலைவர்கள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் முதற்கட்டமாக தடுப்பூசியை கொடுத்து முன்னுதாரணமாக செயல்பட அனுமதிக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

மேலும் மின் வினியோகத்தை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் முடிவிற்கு புதுச்சேரி மாநில அரசுக்கு உடன்பாடு இல்லை அதை முழுவதுமாக எதிர்ப்பதால் மின் துறை ஊழியர்கள் மக்களுக்கு இடையூறான போராட்டத்தில் ஈடுபடுவதை தவிர்த்து மத்திய அரசை எதிர்த்து போராடலாம் அல்லது சட்டரீதியாக சந்திக்கலாம் ஆகவே போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பணிக்கு திரும்ப நாராயணசாமி அறிவுறுத்தினார்

Views: - 10

0

0