புதுச்சேரி கொரோனா அச்சுறுத்தல் : காற்று வாங்கிய கடற்கரை!!
1 September 2020, 2:37 pmபுதுச்சேரி : 4ம் கட்ட ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக கடற்கரை சாலையில் மக்கள் நடைபயிற்சி செய்ய ஆர்வம் காட்டாததால் வெறிச்சோடி காணப்பட்டது.
புதுச்சேரியில் 4ம் கட்ட ஊரடங்கு தளர்வுகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மாநில அரசு நேற்று அறிவித்தது. அதன்படி மாநிலத்தில் அனைத்து கடைகளும் இரவு 8 மணி செயல்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் புதுச்சேரி கடற்கரை சாலை மக்கள் நடைபயிற்சி மேற்கொள்ளவும், கடற்கரைக்கு பொதுமக்கள் வருகைக்கும் மதியம் 12 வரை அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் புதுச்சேரியில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கடற்கரை சாலையில் நடைபயிற்சி செய்ய பொதுமக்கள் ஆர்வம் காட்டாததால் கடற்கரை சாலை வெறிச்சோடி காணப்பட்டது.
0
0