புதுச்சேரியில் இன்று 368 நபர்களுக்கு கொரோனா தொற்று

19 August 2020, 6:30 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் இன்று 368 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளதை அடுத்து பாதிப்பு எண்ணிக்கை 8762 ஆக உயர்ந்துள்ளது.

உலக நாடுகளை விடாமல் துரத்திக் கொண்டிருக்கிறது கொரோனா வைரஸ். 200 நாடுகளில் இன்னமும் கடுமையான பாதிப்பு இருக்கிறது. அதிகமான கொரோனா தொற்றுகள் அமெரிக்காவில் பதிவாகி உள்ளது. பிரேசிலும் கொரோனா தாக்கத்தில் இருந்து தப்பவில்லை. இந்தியாவிலும் கடுமையான பாதிப்பு உள்ளது. தென்னிந்தியாவை பொறுத்தவரை தமிழகத்தில் தான் அதிக பாதிப்பு. தொற்றுகள் அதிகம் பதிவாகும் அதே நேரத்தில் குணம் பெற்றவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது.

இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் இன்று 368 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளதை அடுத்து பாதிப்பு எண்ணிக்கை 8762 ஆக உயர்ந்துள்ளது. புதுச்சேரியில் 328 நபர்களுக்கும், காரைக்காலில் 4 நபர்களுக்கும், ஏனாமில் 36 நபர்களுக்கும் இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதில் 3321 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர், 5312 நபர்கள் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். புதுச்சேரியில் 5 நபர்களும், காரைக்காலில் 1 நபரும் கொரோனா தொற்றால் உயிரிழந்ததை அடுத்து மாநிலத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 129 ஆக உயர்ந்துள்ளது. தற்போது புதுச்சேரி மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 8762 ஆக உயர்ந்துள்ளது.

Views: - 25

0

0