ஒரே நாளில் 168 நபர்களுக்கு கொரோனா… புதுச்சேரியில் 4 ஆயிரத்தை கடந்த கொரோனா…!

4 August 2020, 3:42 pm
corona_comabt_updatenews360
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் 168 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 ஆயரித்தை கடந்தது.

உலக நாடுகளை விடாமல் துரத்திக் கொண்டிருக்கிறது கொரோனா வைரஸ். 200 நாடுகளில் இன்னமும் கடுமையான பாதிப்பு இருக்கிறது. அதிகமான கொரோனா தொற்றுகள் அமெரிக்காவில் பதிவாகி உள்ளது. பிரேசிலும் கொரோனா தாக்கத்தில் இருந்து தப்பவில்லை. இந்தியாவிலும் கடுமையான பாதிப்பு உள்ளது. தென்னிந்தியாவை பொறுத்தவரை தமிழகத்தில் தான் அதிக பாதிப்பு. தொற்றுகள் அதிகம் பதிவாகும் அதே நேரத்தில் குணம் பெற்றவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. இந் நிலையில் புதுச்சேரியில் கொரோனா தாக்கம் வேகமாக உள்ளது. தொடக்கத்தில் குறைவானது போன்று காணப்பட்டாலும் இப்போது பாதிப்பு மிக அதிகமாக இருக்கிறது.

புதுச்சேரி மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 168 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளதை தொடர்ந்து பாதிப்பு எண்ணிக்கை 4146 ஆக உயர்ந்துள்ளது. புதுச்சேரியில் 82 நபர்களுக்கும், காரைக்காலில் 5 நபர்களுக்கும் இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 1,552 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இதுவரை 2,537 நபர்கள் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். புதுச்சேரியில் நேற்று ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்ததை அடுத்து மாநிலத்தில் கொரனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 57 ஆக உயர்ந்துள்ளது. தற்போது புதுச்சேரி மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 4146 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்..