அரசு ஊழியர் கொலை செய்யப்பட்ட வழக்கு: 6 குற்றவாளிகளை கைது செய்த போலீசார்
13 September 2020, 7:19 pmபுதுச்சேரி: புதுச்சேரியில் அரசு ஊழியர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய 6 குற்றவாளிகளை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
புதுச்சேரியில் கடந்த 7ஆம் தேதி சின்னையாபுரத்தை சேர்ந்த அரசு ஊழியரான கணேசனை மர்ம கும்பல் ஒன்று கொலை செய்து தப்பியோடியது. கொலை வழக்கு தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர் இதில் முன்விரோதம் காரணமாக அரசு ஊழியர் கணேசனை வாழைக்குளம் பகுதியை சேர்ந்த வெங்கடேஷ், பைப் அரவிந்த், கட்ட செந்தில்,உதயகுமார், ஜான் மற்று ஏழுமலை ஆகியோர் கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து தலைமறைவாக இருந்த அவர்களை போலீசார் தேடி வந்த நிலையில் காவல் நிலையத்தில் தாமாக வந்து அவர்கள் சரணடைந்தனர்.
தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கடந்த 2018ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட கட்ட செந்திலின் உறவினர் (மாமா) கோணி நாகராஜ் கொலை செய்ய கணேசன் மூலக்காரணமாக செயல்பட்டதாக நினைத்து பழிக்கு பழி வாங்கும் நோக்கத்தோடு அரசு ஊழியரான கணேசனை கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்தனர் பின்னர் கைது செய்யப்பட்ட 6 பேரையும் புதுச்சேரி மத்திய சிறையில் அடைத்தனர்.
0
0