புதுச்சேரியில் வெள்ளையனே வெளியேறு இயக்க நினைவு நாள் கொண்டாட்டம்

9 August 2020, 4:40 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரி மாநில காங்கிரஸ் சார்பில் வெள்ளையனே வெளியேறு இயக்க நினைவு நாள் கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று கொண்டாடப்பட்டது. கட்சி தலைவர், முதலமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர் உள்ளிட்டோர் தியாகிகள் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 9 வெள்ளையனே வெளியேறு இயக்க நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. அதன்படி 78 வது ஆண்டு நினைவு தினமான இன்று வைசியால் வீதியில் அமைந்துள்ள மாநில காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்முதல்வர் நாராயணசாமி, மாநில காங்கிரஸ் தலைவர் சுப்பிரமணியன், பாராளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

பின்னர் தியாகிகளுக்கு சால்வை அணிவித்துமரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து தியாகிகளை கவுரவிக்கும் வகையில் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து மாநில அலுவலகம் முன்பு அமைக்கப்பட்டிருந்த சுதந்திர போராட்ட தியாகிகளின் உருவப்படத்திற்கு முதல்வர் நாராயணசாமி, மாநில காங்கிரஸ் தலைவர், காங்கிரஸ் நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

Views: - 1

0

0