கஞ்சா தோட்டம் போட்டு கோடீஸ்வரனாக திட்டம் போட்ட வாலிபர் – நண்பரால் சிக்கிய பரிதாபம்

Author: Udayaraman
27 July 2021, 3:59 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரி புதுச்சேரியில் வீட்டு வாசலில் 12 அடி உயரத்திற்கு கஞ்சா செடி வளர்த்த வாலிபர் மற்றும் அவரது நண்பரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

புதுச்சேரியில் ஆபரேஷன் விடியல் என்ற பெயரில் கஞ்சா விற்பனையை ஒழிக்க போலிசார் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர், இதன் ஒரு பகுதியாக புதுச்சேரி அரியாங்குப்பம் ஆய்வாளர் தனசெல்வம் தலைமையில் போலிசார் கஞ்சா விற்பனையில் ஈடுப்பட்டு வருபவர்களை தொடர்ச்சியாக கைது செய்து வரும் நிலையில், நேற்று மாலை தேங்காய்திட்டு பகுதியை சேர்ந்த ஒருவரை பிடித்து விசாரணை செய்யும் போது, அவர் தன்னிடம் கஞ்சா எதுவும் இல்லை என்றும், சந்தை புதுகுப்பம் பகுதியை சேர்ந்த ஞானமூர்த்தி என்பவரிடம் தான் தற்போது புதுச்சேரியில் இருக்கும் அனைவருக்கும் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக தெரிவித்துள்ளார். இதனை அடுத்து ஞானமுர்த்தியை பிடித்த போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில்,

தாம் கஞ்சா அனைத்தையும் விற்று விட்டதாகவும், அதே பகுதியை சேர்ந்த நாகராஜ் என்பவரிடம் தான் கஞ்சா வாங்க செல்ல போவதாக தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து நாகராஜை பிடிப்பதற்காக அவரது வீட்டிற்கு போலிசார் சென்று சோதனை செய்த போது, அங்கு கஞ்சா ஏதுவும் பிடிப்படவில்லை. ஆனால் சோதனை முடித்து வீட்டு வெளியே வந்து பார்த்த போது 12 அடியில் வித்தியாசமான ஒரு செடி வளர்ந்து இருப்பதை கண்ட போலீசார் அதிர்ச்சி அடைந்து அந்த செடியை ஆய்வு செய்த போது அது கஞ்சா செடி என கண்டுப்பிடிக்கப்பட்டது. இதனை அடுத்து நாகராஜிடம் விசாரணை நடத்தியதில்,

அவர் ஞானமூர்த்தியின் அறிவுறுத்தலின் படி கஞ்சாவில் வந்த விதைகளை எடுத்து வீட்டு வாசலில் நட்டு கஞ்சா செடி வளர்த்ததாகவும், தன் தாய் கேட்டதற்கு அழகு செடி வளர்பதாகவும், கஞ்சா வாங்கி விற்பததை விட தாமே செடி வளர்த்து சாகுபடி செய்து விற்பனை செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் விரைவில் பணக்காரர் ஆகிவிடலாம் என என்னி செடி வளர்த்ததாக ஒப்புகொண்டுள்ளார். தொடர்ந்து அந்த செடிகளை அழித்த போலிசார் பிடிப்பட்ட ஞானமுர்த்தி மற்றும் நாகராஜை காட்டேரிக்குப்பம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த காட்டேரிக்குப்பம் போலிசார் இருவரையும் கைது செய்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 461

0

0