கறி சோறுக்கு ஆசைப்பட்டவருக்கு காப்பு: முயலை வேட்டையாடிய 4 இளைஞர்கள் துப்பாக்கியுடன் கைது

6 July 2021, 3:34 pm
Quick Share

வேலூர்: காட்பாடியில் முயலை வேட்டையாடிய 4 நரிக்குறவர்களை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்த துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டது.

வேலூர் மாவட்டம் காட்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நரிக்குறவர்கள் பெரிதும் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் வயிற்றுப் பிழைப்புக்காக சிறுசிறு வீட்டு உபயோகப் பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். சில நேரங்களில் கறி சமைப்பதற்காக காடை கொக்கு நாரை உள்ளிட்ட பல்வேறு உயிரினங்களை வேட்டையாடி கறி சமைத்து சாப்பிடுவது வழக்கமாக வைத்திருக்கின்றனர். இந்நிலையில் கொரோனா ஊரடங்கு என்பதால் அவர்களுக்கு வியாபாரமும் சரிவர இல்லாததால் உறவினர் ஒருவரின் நிச்சயதார்த்த விழாவிற்கு கறி சோறு போடுவதற்கு காட்பாடி அடுத்த பெரிய புதூர் பகுதியில் மூன்று முயல் மற்றும் ஒரு காட்டுப் பூனையை வேட்டையாடி உள்ளனர். இது குறித்து அப்பகுதிமக்கள் காட்பாடி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்து உள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காட்பாடி போலீசார் வேட்டையில் ஈடுபட்ட நரிக்குறவர்கள்களை கையும் களவுமாக பிடித்தனர். காட்பாடி போலீசார் மேலும் வேட்டையாட பயபடுத்தப்பட்ட இரண்டு நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து போலீசார் தேவதாரிசிங், குட்டி, பகவதி, அன்பு ஆகிய நால்வரை இரண்டு நாட்டு துப்பாக்கியையும், காட்பாடி வனவர் ஜனார்த்தனன் அவரிடம் ஒப்படைத்தனர். வேட்டையாடப்பட்ட முயல் மற்றும் காட்டுப் பூனைகளின் உடலை காட்டுப் பகுதியிலேயே சென்று புதைத்தனர். மேலும் வனத்துறையினர் விசாரணைக்கு பின் வேட்டையாடிய நரிக்குறவர் நான்கு பேரையும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

Views: - 385

0

0