செல்ல பிராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசி சிறப்பு முகாம்

6 July 2021, 1:26 pm
Quick Share

அரியலூர்:அரியலூரில் உள்ள கால்நடை மருத்துவமனையில் செல்ல பிராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது.

உலக வெறிநோய் தினம் இன்று கடைபிடிக்கபடுகிறது. இதனையொட்டி கால்நடை பராமரிப்பு துறை சார்பில் வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் இன்று நடைப்பெற்றது. இதில் பல்வேறு வகையான இன நாய்களுக்கு தடுப்பூசி போடபட்டது. இந்த நிகழச்சியில் அரியலூர் நகர பகுதி மட்டுமின்றி கோக்குடி உள்ளிட்ட கிராமங்களில் செல்ல பிராணிகள் வளர்ப்போர் அதனை அழைத்து வந்து தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

மேலும் விலங்குகள் மூலம் பரவும் நோய் தடுப்பு தின உறுதிமொழி ஏற்று கொள்ளபட்டது. முன்னதாக விழிப்புணர்வு ஒவிய போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கபட்டது. இதில் சுகாதாரபணிகள் துணை இயக்குனர் ஹேமசந்த்காந்தி மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் உடன் இருந்தனர்.

Views: - 123

0

0