பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ரயில்வே தொழிற் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Author: kavin kumar
16 August 2021, 3:57 pm
Quick Share

சென்னை: ரயில்வே துறையை தனியார் மயமாக்குதல் உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய எஸ்.சி , எஸ்.டி ரயில்வே தொழிற் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை அயனாவரத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் , ரயில்வே ஊழியர்கள் கலந்து கொண்டு கோசங்களை எழுப்பினர்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சங்கத்தின் பொது செயலாளர் ஞானசேகரன் , நிர்வாகத் திறன் கொண்ட லாபத்தில் இயங்கி வரும் ரயில்வே துறையை தனியார் மயமாக்க கூடாது, ரயில்வே துறையில் காலியாக உள்ள 2 லட்சம் காலி இடங்களை பூர்த்தி செய்ய வேண்டும் எனவும், இரயில்வே மற்றும் மத்திய அரசின் துறைகளில் தனியார் மயத்தை புகுத்துவதை கைவிடவும், அவுட் சோர்சிங் முறையை முற்றிலுமாக ரத்து செய்யவும், இரயில்களையும் , ரயில் நிலையங்களையும் தனியார்க்கு தாரை வார்ப்பதை உடனே கைவிடவும் 7வது ஊதிய உயர்வில் குறைந்த பட்ச ஊதியம் ரூ.18000 என்பதை மாற்றி ரூ.24,000 ஆக வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

Views: - 130

0

0