மத்திய அரசை கண்டித்து ரயில்வே தொழிற்சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

By: Udayaraman
8 October 2020, 6:52 pm
Quick Share

திருச்சி: திருச்சியில் ரயில்வேயை தனியார் மயமாக்கும் மத்திய அரசை கண்டித்து ரயில்வே தொழிற்சங்கத்தினர்
கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருச்சி ரயில்வே ஜங்ஷனில் உள்ள திருச்சி கோட்ட டி.ஆர்.எம் அலுவலகம் முன்பாக இந்திய ஓபிசி ரயில்வே தொழிற் சங்கத்தின் சார்பில் ரயில்வேயை தனியார் மயமாக்கும் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சி கோட்ட செயலாளர் மீரான் தலைமையில் 100க்கு மேற்பட்டோர் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் இந்திய இரயில்வேயில் தனியாரை அனுமதிக்க கூடாது,

இந்திய இரயில்வேயில் உள்ள தனியார் இரயில்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும், அப்ரண்டீஸ் முடித்த மாணவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து பணி வழங்க வேண்டும்,
BCக்கு உண்டனா சலுகைகளை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், தொழிலாளர்களுக்கு நிலுவையுள்ள அகலவிலைப்படி & போனஸ் உடனே வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பட்டத்தில் கோஷமீட்டனர்.

Views: - 27

0

0