கனமழை வெள்ள காலங்களில் தண்ணீரில் மூழ்கியவர்களை மீட்பது குறித்து பாதுகாப்பு ஒத்திகை
1 September 2020, 4:34 pmதிருவள்ளூர்: பழவேற்காடு ஏரியில் வடகிழக்கு பருவமழை கன மழை வெள்ள காலங்களில் தண்ணீரில் மூழ்கியவர்களை மீட்பது குறித்து பாதுகாப்பு ஒத்திகையை தீயணைப்பு துறை வீரர்கள் செய்து காட்டினர்.
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு ஏரியில் தமிழ்நாடு தீயணைப்பு மீட்பு பணிகள் துறை வட மேற்கு மண்டல துணை இயக்குனர் சத்யநாராயணன் அவர்கள் தலைமையில் வடகிழக்குப் பருவமழை துவங்குவதை ஒட்டி கன மழை வெள்ள காலங்களில் தண்ணீரில் மூழ்கிய பொதுமக்களை பாதுகாப்பாக மீட்பது குறித்த ஒத்திகை பயிற்சி மேற்கொண்டனர்.
இதில் எளிய முறையில்பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய தெர்மாகோல் தண்ணீர் கேன்கள் வாழைப் பட்டைகள், லைப் ஜாக்கெட், மிதவை ரப்பர் படகுகள் உதவியுடன் பாதுகாப்பாக மீட்கும் ஒத்திகையை தீயணைப்பு துறை வீரர்கள் செய்து காட்டினர். இதில் ஏராளமான மீனவர்கள் பொதுமக்கள் பங்கேற்றனர். பேரிடர் அவசர காலங்களில் இந்த ஒத்திகை முறைகளை பின்பற்ற வேண்டும் என தீயணைப்புத்துறையினர் வேண்டுகோள் வைத்தனர்.
0
0